widget

தமிழ்வின் செய்திகள்

lunedì 7 aprile 2014

உழைத்து களைத்தாய் அப்பா..

உறவில் தந்தையாய்
உணர்வில் அன்னையாய்
உயிரில் கலந்தாய் அப்பா _ நான்
இரவில் தனியாக
தெருவில் வரும் போது
மழையில் நனைந்தாய் அப்பா..
குடையில் இடமிருந்தும்

மழையில் நனைந்தாய் அப்பா - தினம்
மனதில் எனை நிறுத்தி
உடலில் தளர்ந்தாலும்
உழைத்து களைத்தாய் அப்பா..
தஞ்சை பெருங்கோயில்
தலைய சிற்பி போல்
என்னை வளர்த்தாய் அப்பா _ தினம்
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னை செதுக்க நீ
உன்னை வருத்தாய் அப்பா..
பணியில் இருந்து நீ

lunedì 31 marzo 2014

துயர் பகிர்வோம் ..

 
திரு சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி                                                                              யாழ். நாகர்கோவில் தரவையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி உபயகதிர்காமத்தை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி அவர்கள் 29-03-2014 சனிக்கிழமை அன்று காலாமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
குமார்(லண்டன்), கஜன்(அவுஸ்திரேலியா), கவி(லண்டன்), சிஜன், ரூபன், வேந்தன் ஆகியோரின் அனபுத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 01:00 மணிக்கு செம்பியன்பற்றில் அமைந்துள்ள் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

உழவன் நான் ..

ஒப்பில்லா உழவன் நான் ..
ஒப்பனை இல்லாத மனிதனும் நான்தான் ..
ஒப்புக்கு ஒரு வாழ்க்கையோடு வாழ்கிறேன் !

உலகின் முதல் குடிமகன் நான் ....
உழைத்து பிழைக்கும் உன்னதனும் நான்தான் ..
உயிர் வளர்க்கிறேன் ஊனமான இந்த உலகில் ..!

domenica 30 marzo 2014

மறை சொன்ன சத்திய வழியிலே.......


உதட்டிலே உரைத்திடும் உண்மைகள்,
இதயத்தில் வெறுமையின் பொய்மைகள்.
களவுக்கும் கொடுமைக்கும் பஞ்சமோ..!
படைப்பவன் பெயராலும் இது தொடருதே......

giovedì 27 marzo 2014

பொண்ணு பார்த்திட்டேன்.............


 பால்வண்ணக்காரி
பாவாடை தாவணிக்காரி
பார்வையாலே கொல்லும்
பாசக் கயறுகாரி
நூலன்ன இடைகாரி
நூதன பேச்சுக்காரி
நாடி நரம்புக்குள்
ஊடுருவும் நளினக்காரி ...
சூரிய பொட்டுக்காரி
சுந்தர முககாரி
சுடரொளி பார்வைகாரி
சொர்ணத்துக்கு
சொந்தக்காரி
நாட்டுக்காரி
நல்ல கூட்டுக்காரி -நான்
கட்டிக்கபோகும் பட்டுக்காரி
பால்வண்ண முகம் பார்த்தா
பசி தானே பறந்து போகும்
பாங்குடனே பேசக்கேட்டா
பலநாள் சோகமும் பட்டே போகும்.,....

martedì 25 marzo 2014

இயற்கையின் சங்கமத்தில்......



பூவினமும் அகம் மகிழ்ந்து
பூத்துக் குலுங்குதே...!
புள்ளினமும் வான் வெளியில்
பறந்து மகிழுதே...!...

தேன் சொரிந்து கனிகளெல்லாம்
களிப்பில் ஆடுதே...!
இதைப் பார்க்கும்போது உந்தன் உருவம்
எனக்குள் இனிக்குதே...

பனித்துளிகள் புல்வெளியில்
படுத்து உறங்குதே...!
பகலவனும் மெல்ல வந்து
அதனை எழுப்புதே...!
அசைந்து ஓடும் நதியும் மெல்ல
தாளம் போடுதே...!
அதைக் கண்டு கண்டு என் மனது
உன்னை நாடுதே...!

உலகிலுள்ள இயற்கையெல்லாம்
இன்பந் தருகுதே...!
இனிய தமிழின் காதலினை
உள்ளம் பாடுதே...!

MB

Tamil Radios
Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk Livelk
 
ஜோதிடம்
 

Wikipedia search

Risultati di ricerca

இத்தாலியின் காலநிலை

 

 

.

.